ஆதார், பான் எப்படி இணைப்பது..? இதோ சூப்பர் வழி
டெல்லி: ஆதார், பான் கார்டை எப்படி இணைப்பது என்பது குறித்து பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பான் கார்டுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று 2017ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதன் பிறகு பலமுறை இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. தற்போது வரும் செப்டம்பர் வரை இந்த கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், பெரும்பாலான நபர்கள் ஆதார், பான் எப்படி இணைப்பது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளாமல் உள்ளனர். www.incometaxindiaefiling என்ற வெப்சைட்டில் சென்று ஆதார், பான் இணைத்து கொள்ளலாம்.
அதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்…
- முதலில் www.icometaxindiaefiling.gov.in வெப்சைட்டினுள் செல்ல வேண்டும்.
- அதில் உள்ள link aadhaar என்ற இணைப்பை க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு உங்களது கம்ப்யூட்டர் ஸ்கிரினில் பான் நம்பர், ஆதார் எண்,பெயர் (ஆதார் அட்டையில் என்ன பெயர் எழுதப்பட்டுள்ளதோ அப்படியே) பதிவு செய்ய வேண்டும்.
- சிலருக்கு ஆதார் அட்டையில் பிறந்த தேதி முழுமையாக இருக்காது. பிறந்த ஆண்டு மட்டும் இருக்கும். அவர்கள் I have only year of birth in aadhaar card என்பதை டிக் செய்தால் போதும்.
- பின்னர் நீங்கள் தந்த அனைத்து விவரங்களையும் ஒரு முறை சரிபார்த்து, I agree to validate my aadhaar details with UIDAI என்பதை டிக் பண்ண வேண்டும்.
- Capchaவை டைப் பண்ணி அல்லது ஓடிபியில் தெரிந்து கொண்டு link aadhaar என்ற பட்டனை அழுத்தவும்.
- அவ்வளவு தான்….. உங்களது ஆதார் எண், பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.
சரி… அனைத்தும் முடிந்துவிட்டது. இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி உறுதி செய்து கொள்வது என்ற கேள்வி எழலாம். மீண்டும் வருமான வரித்துறையின் இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
அதில் link aadhaar பக்கத்தில் view status என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்து உறுதி செய்யப்பட்ட நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் பான், ஆதார் இணைக்கப்பட்டு விட்டது என்றால் your pan on linked to aadhaar number என்ற செய்தி பார்வைக்கு வந்து செல்லும். இப்படி எளிதான முறைகளில் பான், ஆதார் எண்களை இணைத்துக் கொள்ள முடியும்.