சிவகார்த்திகேயன் நண்பர், பிரபல இளம் இயக்குநர் மனைவி திடீர் மரணம்…!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரும், இளம் இயக்குநருமான அருண் காமராஜின் மனைவி காலமானார். அவருக்கு வயது 38.
வளர்ந்து வரும் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் அருண் காமராஜ். இவர் பாடலாசிரியரும் கூட. கபாலி படத்தில் நெருப்புடா என்ற பாடலை எழுதியவர். ராஜா ராணி, க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர்.
அது தவிர 2018ம் ஆண்டு பெண்கள் கிரிக்கெட்டை மையமாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா என்ற படத்தை இயக்கினார். அவர் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 என்ற இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.
இந் நிலையில் அருண் காமராஜ் மனைவி சிந்துஜா திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பத தெரியவர உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது காலமாகி உள்ளார். அவருக்கு வயது 38.
சிந்துஜாவின் மரண செய்தி அறிந்து திரையுலகத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். அருண் காமராஜின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். பல்வேறு தரப்பினரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.