Sunday, May 04 11:54 am

Breaking News

Trending News :

no image

எல்லா கொரோனாவையும் கூப்பிடுங்க…! வந்தாச்சு 'சூப்பர்' வேக்சின்..!


வாஷிங்டன்: அனைத்து வகையாக கொரோனா வைரஸ்களையும் ஒரு கை பார்க்கும் சூப்பர் வேக்சினை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தி இருக்கின்றனர்.

கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளில் இன்னமும் குறையவில்லை. தடுப்பூசி போட்டாலும் உருமாறி மீண்டும் கொரோனா வைரஸ் வலம் வந்து கொண்டு இருக்கிறது. பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை இன்னமும் மக்களுக்கு போட்டு வருகின்றன.

ஆனாலும் இந்த கொரோனா டெல்டா, கொரோனா டெல்டா பிளஸ் என உருமாறி பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. இத்தனை சிக்கல்களுக்கு எந்த வகை கொரோனா வைரசாக இருந்தாலும் அதை எதிர்க்கும் வகையில் அமெரிக்க விஞ்ஞானிகள் சூப்பர் வேக்சின் ஒன்றை கண்டறிந்து உள்ளனர்.

வடக்கு கரோலினா நகரத்தில் இருக்கும் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த வேக்சினை உருவாக்கி அசத்தி உள்ளனர். கொரோனா வைரசில் உள்ள ஸ்பைக் புரதத்தை இந்த வேக்சி எதிர்க்கிறது என்பதை எலிகள் மீது நடத்தப்பட்ட பரிசோதனையில் விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

நுரையீரல் பாதிக்கப்படுவதையும் இந்த வேக்சின் தடுப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. விலங்குகளில் இருந்து மனிதனுக்கு பரவும் மற்ற கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் இந்த தடுப்பு மருந்து வேலை செய்வதும் நிரூபணமாகி உள்ளது. அடுத்த ஆண்டில் இந்த மருந்தானது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

Most Popular