Sunday, May 04 12:06 pm

Breaking News

Trending News :

no image

பிரபாகரன் சாகவில்லை….? கதைக்கும் இயக்குநர்


சென்னை; எல்டிடிஈ பிரபாகரன் சாகவில்லை, அவர் உயிரோடு இருக்கிறார் என்று ஒரு தகவலை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் கவுதமன்.

ஈழ விடுதலை போரை உலகின் எப்பகுதி மக்களும் மறந்திருக்க முடியாது. குறிப்பாக உலகம் எங்கும் நிறைந்திருக்கும் தமிழ் மக்கள் நினைவில் அழிக்க முடியாத சம்பவங்கள் அவை.

2009ம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தகவலை அவரது ஆதரவு அமைப்புகள், தமிழீழ அமைப்புகள் மறுத்து அவர் உயிருடன் உள்ளார் என்று கூறி வருகின்றன.

இதே கருத்தை உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறனும் தெரிவித்து வருகிறார். அதே கருத்தில் இன்றும் உறுதியாகவும் உள்ளார். இப்படிப்பட்ட தருணத்தில் பிரபாகரன் மகள் துவாரகா என்ற பெண்ணின் வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால் இதன் உண்மை தன்மை குறித்து எந்த உறுதியான தகவல்கள் பகிரப்படவில்லை.

இந் நிலையில், பிரபாகரன் உயிருடன் உள்ளார். சாகவில்லை என்று கூறி அதிர வைத்திருக்கிறார் இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியை நடத்தி வரும் கவுதமன். இது குறித்து அவர் கூறியது;

என்னிடம் அலைபேசியில் பிரபாகரன் மகள் துவாரகா பேசினார். பிரபாகரன் பற்றி பேசினேன். மவுனமாக இருந்த அவர்,அப்பா, அம்மா நலமுடன் உள்ளனர் என்று கூறி இருக்கிறார் என்றார்.

கவுதமனின் இந்த கருத்து தான் இப்போது உலக அளவில் உள்ள தமிழர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரின் இந்த கூற்று எந்தளவுக்கு உண்மை? துவாரகாவுடன் பேசிய ஒலிநாடாவை அவர் வெளியிடலாமே? என்ற கருத்துக்களும் தற்போது எழுந்துள்ளன.

Most Popular