நம்மவர் போட்டியிடும் அந்த தொகுதி..! எதிர்க்கட்சிகளே ‘ஜெர்க்’ தந்த வேட்பாளர் பட்டியல்
சென்னை: சட்டசபை தேர்தலில் கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். கோவை தெற்கு தொகுதியில் காங்கிரசை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.
சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன், தி.நகரில் பழ.கருப்பையா, மயிலாப்பூரில் ஸ்ரீபிரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கமல் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை ஆலந்தூர் தொகுதியில் நடிகர் ஆனந்த் பாபு களம் காண்கிறார். முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தாசப்பராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி லோக் சபா தொகுதியில் வேட்பாளராக சுபா சார்ல்ஸ் போட்டியிடுகிறார்.