நாம் தமிழர் கட்சியில் நடந்த ‘அந்த’ சம்பவம்…! தொண்டர்கள் ‘ஷாக்’
சென்னை: நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான சாகுல் ஹமீது திடீரென காலமானார்.
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியும், ஒருங்கிணைப்பாளருமான சாகுல் ஹமீது, சென்னையில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சாகுல் ஹமீது, தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந் நிலையில் அவர் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமானார்.
அவரது மறைவு கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளது.