Students…! நாளை முதல் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை…! அரசு அறிவிப்பு
தொடர்ந்து அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பொதுத்தேர்வுகள் நடந்து வருவதால் மாணவர்களும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இந் நிலையில் காய்ச்சல் தொற்று அதிகம் இருப்பதால் புதுச்சேரியில் நாளை முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில் கூறி உள்ளதாவது: புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8 ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16 முதல் 26 வரை விடுமுறை விடப்படுகிறது என குறிப்பிடப்பட்டு உள்ளது.