மோடி தாத்தா… இந்தி படிக்கணும்…! #VanakkamModi
நான் இந்தி படிக்கணும்… மோடி தாத்தா என்று சிறுமி ஒருவர் விடுத்துள்ள கோரிக்கை இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திருச்சி வந்திருக்கிறார். அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது.
மோடி வருகையால் தமிழக பாஜக ஏற்கனவே படு உற்சாகத்தில் இருக்கிறது. அவருக்கான வரவேற்பும் தடபுடலாக இருந்த நிலையில், இணையத்தில் சிறுமி ஒருவரின் மோடி தாத்தா.. என்று எழுதிய படி நிற்கும் போட்டோ சக்கை போடு போடுகிறது.
2ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியின் பெயர் துவாரகா மதிவதனி. நாகையை சேர்ந்தவர். இந்தி படிக்க வேண்டும், அரசு பள்ளியில் இந்தி மொழி இல்லை என்று எழுதி அசத்தி இருக்கிறார்.
அவர் தமது பதாகையில் கூறி உள்ளதாவது:
அன்புள்ள மோடி தாத்தா…
என் பெயர் துவாரகா மதிவதனி, 2std படிக்கிறேன். நான் ஹிந்தி கத்துக்கணும், எங்க ஊர் நாகப்பட்டினம். இங்கே அரசு நடத்தும் பள்ளிக்கூடம் இந்தி படிக்க எதுவும் இல்லை.
பள்ளிக்கூடம் கட்டுறதுக்கு என் அப்பாக்கிட்ட இடம் தர சொல்லுறேன், நீங்க பள்ளிக்கூடம் கட்டிதாங்க, அதுல நாங்களும் இந்தி கத்துக்கணும்… ஜெய்ஹிந்த் என்று எழுதி, அதை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் தந்துள்ளார்.
இந்த போட்டோ எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. அதை காணும் பலரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட் போட்டுள்ளனர். அவற்றில் சில சாம்பிள்கள் கீழே செய்தியின் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.