நல்ல குடும்பத்தில் தான் பொறந்தியா…? நடிகர் கார்த்தியை கழுவிய ‘குட்டிசாக்கு’
சென்னை: திருக்குறளை உவமையாக காட்டி நடிகர் கார்த்தியை மன்னிப்பு கேட்குமாறு காமெடி நடிகர் வலியுறுத்தி உள்ளார்.
பருத்திவீரன் பட சர்ச்சைக்கு இன்னமும் முடிவு ஏற்படவில்லை. ஞானவேல் ராஜாவுக்கு எதிராக திரையுலகில் பலரும் முஷ்டியை தட்ட ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் பருத்திவீரன் படத்தில் அட்டகாச நடிப்பை வெளிப்படுத்திய குட்டிசாக்கு என்கிற விமல் நடிகர் கார்த்திக்கு அட்வைஸ் பண்ணி இருக்கிறார். சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு உள்ள பதிவு இதோ;
வணக்கம்.
திரு.ஞானவேல் ராஜா அவர்கள் பேசிய காணொளியை பார்க்க நேர்ந்தது. தெருக்களில் விளையாடி கொண்டிருநத என்னை அழைத்து நடிப்பு சொல்லி கொடுத்து எனக்கு வாய்ப்பு கொடுத்த அமீர் மாமா மீது இப்படியான பழிகளை சுமத்தியது மிகவும் வேதனையை ஏற்படுத்தியது.
படம் பாதியிலேயே விட்டுட்டு போன நீங்கள் அதன் பிறகு அங்கு நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் என்ற முறையில் நான் நன்கு அறிவேன்.
படம் ஆரம்பத்தில் இருந்த மகிழ்ச்சியான அமீர் மாமா, அதன் பிறகு அவருக்கு அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அதை அனைத்தையும் படபிடிப்பு தளத்தில் அருகில் இருந்து பார்த்தவன் நான்.
எனவே ஞானவேல் அவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். எனக்கும் கார்த்தி அண்ணாவுக்கு அதுதான் முதல் படம். அவரும் அந்த சூழலை நன்கு அறிவார்.
தற்போது அவர் அமைதி காப்பது, மிகவும் தவறான செயல் என்று கூறி இருக்கிறார்.
மேலும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி புத்தி சொல்லி உள்ளார்.
குறள் 952:
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
விளக்கம்:
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றில் இருந்தும் விலகமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார் குட்டிசாக்கு.