பீகாரில் ஆசிரியராகும் பிரேமம் பட நடிகை..? ஒரு கோமாளி கூத்து…
பாட்னா: பீகார் மாநில அரசு பள்ளி ஆசிரியர் தகுதி தேர்வில் பிரேமம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தேர்ச்சி அடைந்துள்ளது, அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருககிறது.
பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அந்த பட்டியலில் கேரளாவில் உள்ள பிரபல நடிகை பாசாகி இருக்கிறார். இப்படித்தான் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவில் உள்ள பிரபல நடிகை.. பீகாரில் வாத்தியார் வேலைக்கு போகிறரா..? என்ன இது ஒரே குழப்பம் என்பவர்களுக்கு முழு விஷயத்தையும் படித்தால் மட்டுமே புரியும்.
பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் ரிஷிகேஷ்குமார் என்பவரின் மதிப்பெண் சான்றிதழில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் போட்டோ ஒட்டப்பட்டுள்ளது. ரிசல்ட் வெளியானதை அறிந்த ரிஷிகேஷ் குமார் ஆர்வமுடன் முடிவை பார்த்து இருக்கிறார்.
அப்போது தான் தாம் பாசாகவில்லை… தமது பெயரில் அனுபமா பரமேஸ்வரன் பாசாகி உள்ளார் என்பது. என்ன இது தவறாயிற்றே என்று தேர்வுத்துறையை ரிஷிகேஷ் அணுகி விவரத்தை கூறி இருக்கிறார். ஆனால் அவர்களோ கண்டுகொள்ளவே இல்லை என்று புலம்பி தள்ளி உள்ளார்.
பீகாரில் இப்படிப்பட்ட கூத்து நடப்பது முதல் முறையல்ல.. பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் போட்டோவும் கூட ஒரு முறை இதே ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண் பட்டியலில் வந்திருக்கிறது… அப்படி இருக்கிறது அம்மாநிலத்தில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்…!