பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு….! இதோ முழு விவரம்…!
சென்னை: வரும் மே மாதம் 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. அதற்கான முழு கால அட்டவணைய அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டு உள்ளார்.
மே 3ம் தேதி தொடங்கும் தேர்வுகள், 21ம் தேதி முடிகின்றன. முதல் நாளான மே 3ம் தேதி மொழிப்பாட தேர்வும், மே 5ம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடத்தப்படுகிறது. மே 7ம் தேதி உயிர் வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் என 9 பாடங்களுக்கும், மே 11ம் தேதி இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
மே 17ல் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல் என 10 பாடங்களுக்கும், மே 19 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் என 11 பாடங்களுக்கும் தேர்வுகள் நடக்கிறது. மே 21ல் வேதியியல், ஜியோகிராபி உள்ளிட்ட 3 பாடங்களுக்கும் தேர்வுகள் நடக்கின்றன.