திரையுலகம் ஷாக்…! 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் பிரபலம் 'திடீர்' மரணம்
என்ஜாய் எஞ்சாமி பாடலில் ஒப்பாரி பாட்டு பாடி நடனமாடிய நாட்டுப்புற பாடகி பாக்கியம்மா திடீரென காலமானார்.
பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் அறிவு மற்றும் தீ குரலில் வெளியானது என்ஜாயி எஞ்சாமி என்ற பாடல். உலகம் முழுவதும் இந்த பாடலை கேளாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவு அந்த பாடல் அனைவர் மனதையும் மயக்கிய பாடல்.
யுடியூபில் இன்னமும் சக்கை போடு போடும் இந்த பாடல் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்த பாடலில் தோன்றி ஒப்பாரி பாட்டு பாடிய நாட்டுப்புற பாடகி பாக்கியம்மா திடீரென காலமாகி உள்ளார்.
உடல்நலக்குறைவால் அவர் காலமானதை பாடகர் அறிவு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரியபடுத்தி உள்ளார். உயிரிழந்த பல உயிர்களுக்காக பாடியவர் நீங்கள்.. உங்களின் அகால மரணத்துக்கு எம்மிடம் வார்த்தைகள் இல்லை… கலைஞர் இறக்கக்கூடும். அவர்களுடைய கலையானது நமது இதயத்தில் நிலைத்திருக்கும் என்று கூறி உள்ளார்.
பாடகி பாக்கியம்மா மறைவுக்கு பாடகி தீ, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.