மாணவர்களை குறி வைக்கும் கொரோனா…! முதலில் சென்னை… இப்போது மதுரை..!
மதுரை: சென்னை ஐஐடியை தொடர்ந்து, மதுரையிலும் கல்லூரி மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இப்போது கல்லூரிகள் இயங்க ஆரம்பித்து இருக்கின்றன. கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி மாணவர்கள் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு சென்றுவரும் மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று உள்ளதா? என்ற பரிசோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, சோதனையும் நடத்தப்பட்டது.
சென்னை ஐஐடியில் நடத்தப்பட்ட சோதனையில் 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து மற்ற அனைத்து மாணவர்களுக்கு சோதனை செய்யப்பட, கிட்டத்தட்ட 191 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.
இந் நிலையில், மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில முதலாமாண்டு பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த மாணவர்கள் விடுதியில் தங்கியவர். எனவே, விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சோதனை நடத்தப்பட உள்ளது. சென்னை ஐஐடியை தொடர்ந்து மதுரை மருத்துவக்கல்லூரியிலும் கொரோனா பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.