Sunday, May 04 12:56 pm

Breaking News

Trending News :

no image

நயன்தாராவுக்கு வந்த அதிர்ச்சி தகவல்…! கண்ணீருடன் சொந்த ஊருக்கு திடீர் பயணம்


தமது அப்பாவின் உடல்நிலை மிகவும் சீரியஸ் என்ற தகவலை அடுத்து சொந்த ஊருக்கு நடிகை நயன்தாரா விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம். இப்பவும் இவர் தான் லேடி சூப்பர் ஸ்டார். அண்ணாத்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். அவர் உள்பட தமிழகமே இந்த படத்துக்காக வெயிட்டிங்கில் இருக்கிறது.

அண்ணாத்த தவிர நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களும் அவரது கைவண்ணத்தில் உள்ளன. இந் நிலையில் அப்பாவுக்கு உடல்நிலை சீரியஸ் என்பதை அறிந்து கொச்சினுக்கு விழுந்தடித்து கொண்டு பறந்திருக்கிறார் நயன்தாரா.

அவரது தந்தை குரியன் கொடியட்டு, கொச்சியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஐசியூவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மை காலமாக குரியன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாராம்.

எனவே எங்கிருந்தாலும் அடிக்கடி கேரளா சென்று தந்தையை பார்த்துவிட்டு வருவாராம் நயன்தாரா. இப்போது தந்தை சீரியஸ் என்று தகவல் வர கண்ணீருடன் கேரளா பறந்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Most Popular