முன்னாள் சுப்ரீம்கோர்ட் நீதிபதி லட்சுமணன் காலமானார்…!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்த ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்.
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை அவரது சொந்த ஊராகும். அவரது மனைவி மீனாட்சி ஆச்சி சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர் அண்மையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் காலமானார்.
ஏ.ஆர். லட்சுமணன் சட்ட ஆணைய தலைவர், முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழு என பல பொறுப்புகளில் இடம் வகித்தவர். இவர் கையாண்ட வழக்குகளில் முக்கிய தீர்ப்பை யாரும் மறக்க முடியாது. அதுதான், பொது இடத்தில் புகை பிடிக்க தடை விதித்து, அதற்கான தீர்ப்பை வழங்கியவர்.