பாஜக வேட்பாளராகிறார் பிரபல நடிகை…! Lok Sabha elections 2024
டெல்லி: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக பிரபல நடிகை கங்கனா ரனாவத் களம் இறங்குகிறார்.
4 தேசிய விருதுகள், 5 பிலிம்பேர் விருதுகள் என்று கலக்கியவர் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். நாட்டில் நிகழும் முக்கிய பிரச்னைகளில் தமது கருத்துகள், விமர்சனத்தை முன் வைத்து வருபவர்.
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் மற்றும் பாஜகவின் அனுதாபி. இவர் அடுத்து வரவுள்ள 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார்.
இந்த தகவலை அவரது தந்தை அமர்தீப் கங்கனாவில் அரசியல் வருகையை உறுதி செய்துள்ளார். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் அவர் போட்டியிகிறார், எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று இப்போது தெரியவில்லை. நிச்சயம் அவர் பாஜக வேட்பாளராக நிற்கிறார் என்றார்.
நடிகை கங்கனா ரனாவத், அண்மையில் பாஜக தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.