பள்ளிகள் ஓபன்… தேதியை சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்…!
சென்னை: முதல்வர் உத்தரவிட்டால் போதும்…. செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தயாராக உள்ளோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறி இருக்கிறார்.
சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது: தமிழக பள்ளிகளில் இடைநிற்றலை தடுக்க அனைத்துவிட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத்துறை நிபுணர்கள் பரிந்துரைப்படி செப்டம்பர் 1ம் தேதி முதல் பளளிகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். பள்ளிக்கல்வித்துறை இப்போதும் தயாராகவே உள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள் சிலநாட்களில் அறிவிக்கப்படும். சுழற்சி முறைய்ல மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாள் ஒன்றுக்கு 20 மாணவர்கள் என மாறி, மாறி வகுப்புகளில் அமர வைக்க திட்டமிட்டு உள்ளோம்.
ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்கப்பட்டு உள்ளது. வரும் 27ம் தேதி சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு. அதற்கான கடைசி கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சற்று தாமதமாகும். மாணவர்கள் இதுபற்றி குழப்பி கொள்ள வேண்டாம் என்றும் கூறினார்.