Sunday, May 04 12:46 pm

Breaking News

Trending News :

no image

#BREAKING நடிகர் அஜித்துக்கு நேர்ந்த சோகம்..! கண்ணீர் விட்டு கதறல்


சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் காலமானார். அவருக்கு வயது 84.

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் அஜித்குமார். அவர் நடிப்பில் ஏகே 62 படம் தயாராகி வருகிறது. இந் நிலையில் அவரின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை காலமாகி உள்ளார். உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். தந்தையின் மரணத்தால் அஜித் கலங்கி போயிருப்பதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அவரின் உடல் இன்று பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அஜித் தந்தை மரணத்தை அறிந்த திரையுலகத்தினரும், ரசிகர்களும் பெரும் சோகம் அடைந்துள்ளார். அனைத்து தரப்பினரும் அவருக்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular