இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய TOP 10 முக்கிய செய்திகளை பார்க்கலாம்:
வெள்ள பாதிப்பு நிரந்தர தீர்வை ஏற்படுத்தும் பணிக்காக ரூ.12,659 கோடி ஒதுக்குமாறு பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி பேச்சுவார்த்தைக்காக 5 பேர் கொண்ட குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார்.
தென்தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தானில் முதலமைச்சரின் கார், கழிவுநீர் கால்வாயில் சிக்கியது. இதையடுத்து முதலமைச்சர் பஜன்லால் சர்மா, மனைவியுடன் வேறு ஒரு காரில் மதுராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வரலாறு காணாத மழை, வெள்ளத்தை தொடர்ந்து நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
578வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ள சீனாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக தைவான் நாடு அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தென்னாப்பிரிக்கா அணி 215 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.