சாவு சகஜம்தான்…! வனிதா விஜயகுமாருக்கு ட்வீட் போட்ட ரசிகர்கள்…!
சென்னை: மரணம் இயற்கையானதே என்று நடிகை வனிதா விஜயகுமாருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி உள்ளனர்.
நடிகை வனிதா விஜயகுமாரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளினால் மக்களை திரும்பி பார்க்க வைத்தவர்.
அவரது அம்மா மஞ்சுளா விஜயகுமார் என்பது அனைவருக்கும் தெரியும். இன்று அவரின் 8ம் ஆண்டு நினைவு நாள். ஆகையால் அம்மாவின் நினைவாக வனிதா விஜயகுமார் டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார்.
அவர் கூறி உள்ளதாவது: எனக்கு சிறந்த ஒன்றை தான் எப்போதும் தந்து இருக்கிறீர்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் உங்களை நான் மிஸ் பண்ணுகிறேன் என்று உருகி உள்ளார் வனிதா விஜயகுமார்.
வனிதா விஜயகுமாரின் டுவிட்டரை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி இருக்கின்றனர். அவர்கள் கூறி உள்ளதாவது:
வாழ்க்கை என்றால் அனைவருக்கும் மரணம் நிச்சயம். எனவே கவலை வேண்டாம். அம்மா எங்கேயும் போகவில்லை. உங்களுடனே உள்ளார். அவரது ஆசிர்வாதம் உங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.