Sunday, May 04 12:46 pm

Breaking News

Trending News :

no image

சதக்…! கத்தியால் குத்தப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்…! அதிமுக அலுவலகத்தில் ரணகளம்


சென்னை: சென்னையில் ஈபிஎஸ் ஆதரவாளர்களினால், ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுக்குழு பற்றிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த அதே நேரம் ஓ பன்னீர்செல்வம் கட்சியின் தலைமை அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்தனர்.

ஈபிஎஸ் அங்கே பொதுக்குழுவில் இருக்க, இங்கே அவரது ஆதரவாளர்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை பூட்டி இருக்கின்றனர். இருபுறமும் இரு தரப்பு ஆதரவாளர்களும் திரண்டு நிற்க கற்கள் பறந்திருக்கின்றன.

கட்சி அலுவலகத்தில் இரு தரப்பினரும் மோதிக் கொள்ள கற்களுடன், கட்டைகளுடன் திரண்டு அடித்து கொண்டிருக்கின்றனர். ரோட்டின் இரு பகுதிகளில் நின்றிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கற்கள், கட்டைகளால் அடித்து கொள்வது என ஒருபுறம் இருக்க அதிமுக அலுவலக பூட்டை உடைத்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்திருக்கின்றனர். மோதல் உச்சத்தை எட்டிய போது, அங்கிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கத்திக்குத்தும் விழுந்துள்ளது.

Most Popular