Sunday, May 04 12:44 pm

Breaking News

Trending News :

no image

ஒரே ஒரு அறிக்கை…! பாஜகவுக்கு முதல் ‘செக்’ வைத்த அதிமுக…!


சென்னை: பாஜக போராட்டம் அறிவித்த நிலையில், தமிழக அரசை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது, பல புதிய விவாதங்களை கிளப்பி இருக்கிறது.

திமுக அரசானது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தாமதம் செய்கிறது என்று குற்றம்சாட்டிய அதிமுக ஒரு போராட்டத்தை அறிவித்து இருக்கிறது. வரும் 27ம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வீடுகள் முன்னே முழக்கங்களை எழுப்பி போராட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

திமுக ஆட்சியை பற்றி இப்போது விமர்சிக்க போவதில்லை என்று கூறியிருந்த நிலையில் அதிமுகவின் இந்த திடீர் போராட்ட அறிவிப்பு பல்வேறு விஷயங்களை வெளிக்கொணர்ந்து இருக்கிறது.

அதிமுகவின் பின்னணியே பாஜகவுக்கு செக் வைப்பது தான் என்று விவரம் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

திமுக ஆட்சியில் அமர்ந்த நாள் அக்கட்சியையும், ஆட்சியையும் சரமாரியாக விமர்சித்து வரும் கட்சி என்றால் அது பாஜக. அதுவும் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட தருணத்தில் இருந்து அதிமுகவை முந்திக் கொண்டு திமுக ஆட்சி பற்றி கருத்துகளையும் விமர்சனங்களையும் கூறி வருகிறது. ஆனால் அதிமுகவோ சத்தம் இல்லாமல் இருக்கிறது.

அதிமுகவின் இந்த அசாத்திய மவுனம் குறித்து கவலைப்பட்ட கட்சியின் முக்கிய சீனியர்கள் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். திமுகவுக்கு எதிராக அறிக்கை அரசியல் போதும், பாஜகவே திமுகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்து களம் காண தயாராகவிட்டது.

ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக அமைதி காப்பது சிறந்தது அல்ல. இதன் மூலம் திமுகவுக்கு எதிர் பாஜக என்ற பிம்பம் கட்டமைக்கப்படும் வாய்ப்பு ஏற்படுத்தி தந்த மாதிரி ஆகிவிடும். எனவே உடனடியாக ஏதாவது ஒரு போராட்ட அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அனைத்தையும் கூட்டி, கழித்து பார்த்த எடப்பாடி போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தொடக்கத்தில் 6 மாதம் வெயிட்டிங் என்று அறிவித்த அதிமுக, இப்போது திடுப்பென்று போராட்டத்தை அறிவித்ததன் பின்னணி இதுதான் என்றும், தம்மை ஒடுக்க நினைக்கும் பாஜகவுக்கு இதுபோன்ற அறிவிப்புகள் மூலம் பதிலடி கொடுக்கலாம் என்று நினைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

அதோடு வேறு ஒரு தகவலையும் கசியவிட்டு உள்ளனர். கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என்பதில் சேதாரத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டு உள்ளதாகவும், அதை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக தரப்பில் இருந்து இந்த போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்றும் கூறுகின்றனர்.

Most Popular