Sunday, May 04 12:37 pm

Breaking News

Trending News :

no image

நாம் தமிழரை அதிர வைத்த அந்த ஒற்றை டுவிட்..! வெளியான கட்சி ரகசியம்…!


சென்னை: நாம் தமிழர் கட்சியில் இப்போது இறங்கி உள்ள பெண் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியில் உள்ளவர்களி சொந்த பந்தங்களே என்று ராஜிவ் காந்தியின் டீவிட் சீமானை கொதிக்க வைத்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த வழக்கறிஞர் ராஜிவ் காந்தி, சீமானின் செயல்பாடுகள் பிடிக்காமல் திமுகவில் தமது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அவரை தொடர்ந்து சீமானின் ஒற்றை தலைமையை எதிர்த்து நாம் தமிழர் தம்பிகள் பலரும் அவருடன் திமுகவில் ஐக்கியமாகினர்.

கட்சி மாறினாலும் அண்ணன் சீமான் என்று இப்பவும் உருகும் ராஜிவ் காந்தி போட்டுள்ள ஒற்றை டுவிட் சீமானை கொதிக்க வைத்திருக்கிறதாம். அவரது டுவிட்டில் இருக்கும் பதிவு இதுதான்:

எனக்கு தெரிந்து அதிகமான வாரிசுகளை வேட்பாளர்களாக நிறுத்தி உள்ள கட்சி நாம் தமிழர் கட்சி. பெண் வேட்பாளர்கள் பெரும்பாலும் கட்சியில் உள்ளவர்களின் அக்கா, தங்கை, மனைவி என தேர்தலுக்காக புதியதாக சேர்க்கப்பட்டவர்களே… கடந்த தேர்தலில் போட்டியிட்ட பல பெண்கள் அதனால் தான் இப்போது கட்சியில் இல்லை என்று கூறி உள்ளார்.

இந்த பதிவு உடனடியாக சீமானின் கவனத்துக்கு கொண்டு போகப்பட கொதிப்பில் முகம் சிவந்தாராம் சீமான். இனி அடுத்து கட்சியை பற்றி என்ன உண்மைகளை சொல்ல போறார் என்று காத்திருக்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.

Most Popular