Sunday, May 04 12:53 pm

Breaking News

Trending News :

no image

நடிகர் விவேக் திடீர் மறைவு….! அதிர்ச்சியில் திரையுலகம்… !


சென்னை: சின்ன கலைவாணர் என்றழைக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 59.

சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள தமது வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த நடிகர் விவேக்குக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக வடபழனியில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் நடிகர் விவேக்கை அனுமதித்த மருத்துவர்கள் அவருக்கு எக்மோ சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். அவரது இறப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்த மருத்துவமனை நிர்வாகம் எவ்வளவோ முயன்றும் நடிகர் விவேக்கை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவரது இதயத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர முயற்சித்தும் உடல்நிலை ஒத்துழைக்க வில்லை என்றும் தெரிவித்தனர்.

ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்ற நடிகர் விவேக் மறைவு ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர், அப்துல்கலாம் மீது அளவற்ற மரியாதையும், அன்பும் கொண்டவர் இயக்குர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்க அண்மையில் தான் அவர் ஒப்பந்தமாகி இருந்தார்.

Most Popular