நிலநடுக்கத்தால் அதிர்ந்த தூத்துக்குடி…! ரிக்டரில் 4.7 என தகவல்…?
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கோவில்பட்டிக்கும் தென்கிழக்கே உள்ளது எட்டயபுரம். இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நிலநடுக்கமானது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.7 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.
சரியாக நேற்று பிற்பகல் 3.17 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து 17. கிலோ மீட்டர் தொலைவிலும், எட்டயபுரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் மையம் கொண்டது என்று தனியார் அமைப்பு ஒன்று தகவல் தெரிவித்து இருக்கிறது.
நிலநடுக்கம் ஏற்பட்டதாகவோ, அப்படி உணர்ந்ததாகவோ தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அரசு தரப்பிலும் எட்டயபுரம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக எந்த தகவலும், அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.