ரேஷன் கார்டில் குடும்ப தலைவர் பெயரை மாத்தணுமா…? ஸ்மார்ட் அறிவிப்பு
சேலம்: ரேஷன் கார்டுகளில் குடும்ப தலைவர் பெயர் மாற்றிக் கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 78 ஆயிரத்து 489 முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 54 ஆயிரத்து 126 குடும்ப அட்டைகளில் குடும்ப தலைவர்களாக ஆண்கள் உள்ளனர். எஞ்சிய அட்டைகளில் பெண்களே குடும்ப தலைவர்களாக இருக்கின்றனர்.
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் 65 ஆயிரத்து 462 அட்டைகளில் குடும்ப தலைவர்கள் பெண்கள் தான் உள்ளனர். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி 2017ல் ஆண் குடும்ப தலைவராக உள்ள அட்டைகளை பெண் குடும்ப தலைவர்களாக மாற்றம் செய்யப்பட வேண்டும். இது தொடர்பான நடவடிக்கைகளை சேலம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
ஆகையால் ஆண் குடும்ப தலைவர்களாக உள்ள 68,099 அட்டைதாரர்கள் முறைப்படி பெயர் மாற்றம் செய்து உணவு பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உரிய ஆவணங்கள், 18 வயது நிறைந்த பெண் குடும்ப உறுப்பினர்கள் போட்டோவுடன் விண்ணப்பக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்து உள்ளது.