Sunday, May 04 07:45 pm

Breaking News

Trending News :

no image

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா..! கொடியேற்றத்துடன் தொடங்கியது


தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா கோவில் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய கோவிலின் 438-வது திருவிழா, ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய விழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சில கட்டுப்பாடுகளை விதித்தார். மேலும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி தூய பனிமய மாதா கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குதந்தையர்கள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

அதன்படி, இன்று காலை பனிமய மாதா கோவிலில் ஊரடங்கு காரணமாக மக்கள் பங்கேற்பின்றி திருப்பலி நடைபெற்றது. அதனைதொடர்ந்து, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதரு A.ஸ்டீபன் அவர்களால் கொடியேற்றப்பட்டது.

மேலும் கொடியேற்றத்தை தொடர்ந்து, பத்து நாட்களும் சிறப்பு திருப்பலிகள், உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் இணையதளம் வாயிலாக மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Most Popular