Sunday, May 04 12:43 pm

Breaking News

Trending News :

no image

20 வயது இந்தியரின் சாதனை…! உலகின் அதிவேக மனித கால்குலேட்டர்


டெல்லி: உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என்ற சாதனையை 20 வயது இந்தியர் படைத்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ் என்கிற இருபது வயது இளைஞர் தான் அவர். லண்டனில் Mental Calculation World Championship என்ற போட்டி நடத்தப்பட்டது.

அதில் கலந்து கொண்ட பானு பிரகாஷ், உலகின் அதிவேகமான மனித கால்குலேட்டர் என்கிற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். மனதில் அதி வேகமாக கணக்கு போடுவார்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

பானு பிரகாஷ், இதுவரை உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என 50 லிம்கா சாதனைகள், 4 உலக சாதனைகளை படைத்து, அசத்தி இருக்கிறார். 

Most Popular