Sunday, May 04 01:03 pm

Breaking News

Trending News :

no image

மோடி ஜி…! இதை செஞ்சு கொடுங்க… ஸ்டாலினின் அடுத்த சர்ப்ரைஸ்


சென்னை: சென்னையில்ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா பிரம்மாண்டமாக நடந்து அனைவர் கவனத்தையும் ஈர்த்தது. இந்த செஸ் தொடர் மீது முதல்வர் ஸ்டாலின் காட்டிய ஆர்வத்தையும், ஏற்பாடுகளையும் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டி சென்றார்.

இந் நிலையில், பிரதமர் மோடிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு:

சென்னையில்நடைபெற்ற 44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட்தொடக்க விழாவில்கலந்து கொண்டமைக்கும்‌, இவ்விளையாட்டுப்போட்டிகளை தமிழ்நாட்டில்நடத்துவதற்குத்தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும்தனது நன்றியை பிரதமருக்குத்தெரிவித்துள்ளார்‌.

இந்தியாவில்விளையாட்டுகளை ஊக்குவிப்பதில்இந்தியப்பிரதமர்காட்டிவரும்ஆர்வத்தை தனது கடிதத்தில்குறிப்பிட்டுள்ள முதலமைச்சர்‌, சென்னையில்ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்‌.

தமிழ்நாடு அரசின்வேண்டுகோளையேற்று, 2024 ஜனவரியில்ஆசிய கடற்கரை விளையாட்டுப்போட்டிகளை தமிழ்நாட்டில்நடத்துவதற்கு, 6- 5- 2022 அன்று தாஷ்கண்டில்நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக்கவுன்சில்நிர்வாகக்குழுக்கூட்டத்தில்கொள்கை அளவில்ஏற்றுக்கொண்டுள்ளதைச்சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர்‌, இவ்விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்குத்தேவையான உத்தரவாதங்களை இளைஞர்விவகாரங்கள்மற்றும்விளையாட்டு அமைச்சகம்விரைவில்வழங்கிட வேண்டியுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்‌.

ஏற்கெனவே மத்திய தகவல்மற்றும்ஒலிபரப்பு, இளைஞர்விவகாரங்கள்மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23- 5- 2022 அன்று கடிதம்எழுதியுள்ளதாகவும்‌, செப்டம்பர்‌ 2022 இறுதிக்குள்ஆசிய ஒலிம்பிக்கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள்வழங்கப்பட வேண்டி உள்ளதால்‌, இளைஞர்விவகாரங்கள்மற்றும்விளையாட்டு அமைச்சகம்விரைவில்அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Most Popular