ராகுல் காந்தியோட நிலைமை இப்படியா போகணும்…! பொங்கிய காங். தொண்டர்கள்
சூரத்: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
2019ம் தேதி மக்களவை தேர்தலின் போது ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார். கர்நாடக மாநிலம் கோலாரில் அவர் பிரச்சாரத்தின் போது பாஜகவை மிக கடுமையாக விமர்சித்தார். நீரவ் மோடியை மையப்படுத்தி பேசிய அவர், மோடி என்ற பெயர் கொண்டவர்கள் அனைவரும் திருடர்கள் என்று பொருள்படி பேசினார்.
அவரின் இந்த பேச்சால் அதிருப்தி அடைந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் குமார் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 3 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
தண்டனையுடன் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி வேண்டுகோளின் படி, மேல் முறையீடு செய்ய 10 நாட்கள் அவகாசமும் அளித்து, தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் அவர்கள், நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டதாகவும் குரல் எழுப்பி இருக்கின்றனர்.