G square விவகாரம்….! படுத்தே விட்ட சவுக்கு சங்கர்…!
சென்னை;ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்ந்த அவதூறு வழக்கில் சவுக்கு சங்கர் மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் முன்னணி உட்கட்டமைப்பு நிறுவனமாக விளங்கி வருவது ஜி ஸ்கொயர்(G Square) என்ற நிறுவனம். இந்த நிறுவனத்துக்கு எதிராக அனைத்து வகையாக ஊடகங்களிலும் பரபரப்பாக பேசியவர் சவுக்கு சங்கர்.
பத்திரிகையாளர் என்றும், அரசியல் விமர்சகர் என்றும் பட்டம் சூட்டிக் கொண்ட அவர் தினமும் அவருக்கென்று இருக்கும் ஊடகங்களில் கலந்து கொண்டு பேட்டியளித்து புலனாய்வு புலி, டிடெக்டிவ் ஜாம்பவான் என்று கூறிக் கொள்வது உண்டு. அவரின் இந்த செயல்கள் இணையத்தில் மிகவும் பிரபலம் என்பதோடு எதிர்மறையான விமர்சனங்களும் இடம்பெற்றது தனிக்கதை.
இந் நிலையில் ஊடகங்களில் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து, அதன் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அவரின் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜி ஸ்கொயர் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் அபிடெவிட் ஒன்றை சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ளார். அதில், G Square நிறுவனம் குறித்து தெரியாமல் பேசிவிட்டதாகவும், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பதிவு செய்துள்ளார்.
இவ்விஷயத்தில் அந்நிறுவனத்தை பற்றி இணையதளங்களில் தாம் வெளியிட்டு பதிவுகளை அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அபிடெவிட் பற்றிய விவரம் இணையத்தில் வெளியாகி ஏக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த அறிந்த சவுக்கு சங்கரின் எதிர்ப்பாளர்கள் இஷ்டத்துக்கு கமெண்ட்டுகளை அள்ளிவிட, அவரின் ஆதரவாளர்களோ பதிலடி தந்து வருகின்றனர்.