Sunday, May 04 11:53 am

Breaking News

Trending News :

no image

திமுகவின் கொங்கு பிளானில் சறுக்கல்…? அதிரடி காட்டிய அதிமுக மாஜி…


சென்னை: திமுகவில் இணைகிறார், ஓகே சொல்லிவிட்டார் என்று கடந்த பல நாட்களாக புகைந்து கொண்டு இருந்த முக்கிய விஷயத்துக்கு சூப்பரான விளக்கம் அளித்துவிட்டார் முன்னாள் சபாநாயகர் தனபால்.

எப்படியாவது கொங்கு மண்டலத்தை கைக்குள் கொண்டுவந்து விட வேண்டும். இதுதான் திமுகவின் முக்கிய ஆபரஷேனாக இப்போது இருக்கிறது. அதற்காகவே பல பிளான்களை போட்டு வருகிறது. முதல் கட்டமாக அங்கிருந்து முன்னாள் அதிமுக மாஜிக்களை வளைக்கும் பொறுப்பு முக்கிய அமைச்சருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

அவரும் தமது பழைய தொடர்புகள் மூலம் அதிமுகவில் அதிருப்தியாளர்களை நெருங்கி உள்ளதாக தெரிகிறது. அவர்களில் பல முன்னாள் மாஜிக்கள் திமுக பக்கம் சாய…. ரெடி என்று சிக்னல் கொடுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதிலும் குறிப்பாக அதிமுக முக்கிய பிரமுகரான முன்னாள் சபாநாயகர் தனபாலும் ஒருவர் என்று செய்திகள் கசிந்து, அதிமுக வட்டாரத்தை கிடுகிடுக்க வைத்தது. எது உண்மை என்று தெரியாமல் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் குழம்பி போய் கிடக்க…. அதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை தந்து இருக்கிறார் தனபால்.

இது குறித்து அவர் தந்த விளக்கம் இதோ: திமுகவில் நான் இணைகிறேன் என்ற தகவலே முதலில் பொய். அதை மறுக்கிறேன். இதுபோன்று தகவல்களை யார் பரப்பினாலும் அது கண்டனத்துக்குரியது.

1972ல் அதிமுக தொடங்கப்பட்ட போது எம்ஜிஆர் மீதான ஈர்ப்பால் மாணவ பருவத்தில் அதிமுகவில் இணைந்து இப்போது வரை பணியாற்றி வருகிறேன். கிட்டத்தட்ட பொது வாழ்க்கையில் 45 ஆண்டுகள் உள்ளேன்.

என்னை பற்றி அறியாதவர்கள் இப்படி வதந்தியை பரப்பி விட்டுள்ளனர். மாற்றத்தை விரும்பாதவன். 7 முறை அதிமுகவில் எம்எல்ஏ, அமைச்சர், துணை சபாநாயகர், சபாநாயகர் என பதவி வகித்து இருக்கிறேன்.

அதிமுகவில் இருப்பது எனக்கு பெருமை. கட்சிக்கு என்றுமே விசுவாசமானவன். திமுகவுக்கு போவது வெளியாகும் செய்திகளில் உண்மையல்ல என்று கூறி இருக்கிறார்.

அவரின் இந்த அறிவிப்பு கொங்கு மண்டலத்தில் திமுகவை கரையேற்ற வேண்டும் என்ற எண்ணத்துக்கு சறுக்கலாகவே அமைந்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. தனபாலை கட்சியை இணைத்துவிட்டால் கொங்கு மண்டல ஆதரவின் முக்கியத்துவம் கிடைத்துவிடும், அதிமுகவின் கொங்கு  சப்போர்ட் என்ற கோட்டையில் ஓட்டை விழுந்துவிடும் என்று திமுக நினைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஓபிஎஸ், இபிஎஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தாலும் கட்சி தாவ மாட்டேன், அனைத்தும் வதந்தி என்று அவரே விளக்கம் அளித்துள்ளது அதிமுக தலைமையை சற்றே நிம்மதி அடைய வைத்திருக்கிறது. அனைத்து முயற்சிகளும் வீண் என்று பேச்சுகள் திமுக வட்டாரத்திலும் எழுந்தாலும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி விட்டதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Most Popular