Sunday, May 04 11:52 am

Breaking News

Trending News :

no image

#CaptainVijaykanth ஒத்த செருப்பும், 10 விநாடியும்..! விஜய்க்கு நடந்தது என்ன?


நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது நடிகர் விஜய்க்கு 10 விநாடிகளில் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியாக உள்ளது.

திரையுலகில் இப்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ஒரு காலத்தில் யார் என்று தெரியாமல் இருந்தவர். விஜயகாந்தை வெற்றி நாயகனாக ஆக்கியவர் அவரது தந்தை எஸ்ஏசி என்று அழைக்கப்படும் எஸ்ஏ சந்திரசேகர்.

தமது மகன் விஜய்க்கு சினிமாவில் ஒரு opening தேவை என்று விஜயகாந்திடம் கூறிய போது அவர் நடித்துக் கொடுத்த படம் தான் செந்தூரப்பாண்டி. அதன் பின்னர் விஜய் தம்மை மெருகேற்றி வசூல் நாயகனாக இருப்பது தனிக்கதை.

விஜயகாந்த் மறைவுக்கு வரமுடியாமல் எஸ்ஏசி ஆடியோ வழியாக இரங்கல் வெளியிட்டார். நடிகர் விஜய் அவருக்கு அஞ்சலி செலுத்த நேரிலே சென்றுவிட்டார். கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு மத்தியில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்ட பேழையை கண்டு கண் கலங்கினார்.

பிரேமலதாவின் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துவிட்டு நகர்ந்த போது மீண்டும் கூட்டம் அவரை அணுக நெட்டி தள்ளியது. அவர்களை விலக்கியபடி, பாதுகாவலர்கள் உதவியுடன் 10 விநாடி அவர் விஜயகாந்த் முகத்தை திரும்பி பார்த்துவிட்டு நகர்ந்த போது தான்.. எங்கிருந்தோ வந்த ஒத்த செருப்பு பறந்தது.

விஜய்க்கு குறி வைத்து வீசப்பட்டதாக பரபரப்பு தொற்றிக் கொள்ள, பாதுகாவலர்களில் ஒருவர் அதை மீண்டும் return shot  என்ற முறையில் திருப்பி எடுத்து வீசியிருக்கிறார். இந்த காட்சி பெரும்பான்மையான ஊடகங்களில் வெளியாகவில்லை. எனவே அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று பலரும் கூற, நடந்தது உண்மை என்று ஒரு தரப்பினர் ஆணித்தரப்பாக கூறி வருகின்றனர்.

Most Popular