330 கிராமில் பிறந்த கின்னஸ் குழந்தை..! ஓராண்டு கழித்து நடந்த விஷயம்… ‘தெறி’ போட்டோ
குறை பிரசவத்தில் வெறும் 330 கிராம் எடையுடன் பிறந்து கின்னஸ் சாதனை படைத்த குழந்தை தமது முதல் பிறந்த நாளை கொண்டாடியது உலகம் முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தை ரிச்சர்டு ஸ்காட் வில்லியம் ஹட்கின்சன். தாயாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட பிரசவ நாளுக்கு முன்னதாக… அதாவது 131 நாட்களுக்கு முன்னரே ரிச்சர்ட்டு பிறந்தார். அப்போது குழந்தையின் எடை வெறும் 330 கிராம்தான்… கால் கிலோவுக்கு சற்றே கூட.. அவ்வளவுதான். குறை பிரசவத்தில் பிறந்த மிகவும் எடை குறைவான குழந்தை என கின்னஸ் சாதனையும் படைத்தது.
ரிச்சர்டு பிறந்த போது அவரது பெற்றோரிடம் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை. மனதை தேற்றிக் கொள்ளுங்கள் என்று அடித்து கூறியிருக்கிறார். மகனை பற்றி மருத்துவர்கள் இப்படி கூற… உடைந்து போயிருக்கின்றனர் பெற்றோர்.
ஆனாலும் மனம் தளர வில்லை. அதே மருத்துவமனையில் 6 மாதங்கள் தங்கி மகனை பாதுகாத்தனர்… சிகிச்சை அளித்தனர். நாட்கள் நகர்ந்தன. இப்போது ரிச்சர்டு தமது முதலாவது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். தமது பிறந்த நாள் நிகழ்வின் போது கேக்கை அந்த ஒரு வயது குழந்தை ரசித்து சாப்பிட்ட காட்சி இணையத்தில் பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.