திமுகவா..? அதிமுகவா..? ஆட்சியை பிடிப்பது யார்…? வெளியான பரபர கருத்துக்கணிப்பு…!
சென்னை: வரக்கூடிய சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் பரபர கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.
ஏப்ரல் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. கட்சிகளுடன் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, பிரச்சார திட்டம் என அனைத்து கட்சிகளும் பரபரவென்று இயங்கி வருகின்றன. அடுத்து யார் ஆட்சி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடமும் இருப்பதை காண முடிகிறது.
அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிவிக்கும் வகையில் 2021ம் ஆண்டு தேர்தல் முடிவில் எந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ், சி வோட்டர்ஸ் இணைந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.
அதன் முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன. கருத்துக் கணிப்பு முடிவில் திமுக கூட்டணி 158 இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணிக்கு வெறும் 58 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதுதவிர மக்கள் நீதி மய்யம் கட்சி 5 இடங்களையும், அமமுக 3 இடங்களையும், மற்ற கட்சிகள் 3 இடங்களையும் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் திமுக முகாம் உற்சாகமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் அதிமுகவில் விரைவில் அடுத்துக்கட்ட ஆலோசனை இருக்கும் என்று கூறப்படுகிறது.