Sunday, May 04 11:48 am

Breaking News

Trending News :

no image

நாட்டையே உலுக்கிய பெகாசஸ்…! உளவு மென்பொருள் சீக்ரெட் உண்மை..!


பெகாசஸ் உளவு மென்பொருள் கொண்டு முக்கிய புள்ளிகளின் செல்போன் பேச்சுகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ள பெகாசஸ் உளவு மென்பொருள்  விவகாரம். நாட்டையே கிடுகிடுக்க வைத்துள்ள பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் இப்போதைக்கு அடங்காது போல் தெரிகிறது.

சரி… அதென்ன பெகாசஸ் என்கிறீர்களா…? பெகாசஸ் என்பது இஸ்ரேல் நாட்டில் என்எஸ்ஒ குழுமம்  என்ற நிறுவனம் தயாரித்த உளவு மென்பொருள். அதாவது spy software. இஸ்ரேலை சேர்த்த என்எஸ்ஓ(niv shalev omri) எனப்படும் நிறுவனம் தான் இதன் அப்பா.

அதாவது… என்எஸ்ஓ என்பது நிவ், ஷலேவ் ஓம்ரி (niv shalev omri) ஆகிய 3 நபர்களின் முதல் எழுத்தை கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்பு. இதன் முக்கிய பணி உளவு பார்ப்பது தான்.

அதுவும் எப்படி தெரியுமா…? உங்களுக்கு தெரியாமல் உங்களை வேவு பார்ப்பது. உளவு என்றால் தெரியாமல் பார்ப்பது தான் என்கிறீர்களா..? ஆனால் உளவு என்றால் உங்களை பின்தொடர்ந்து செல்வது அல்ல… உங்களின் போனின் மூலம் நீங்கள் என்ன பண்ணுகிறீர்கள்? யாருடன் பேசுகிறீர்கள்? உங்கள் மொபைல் போனில் என்னவெல்லாம் வைத்து இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு தெரியாமல் அப்படியே உருவி விட முடியும்.

இன்னும் சொல்லப்போனால்… ஸ்மார்ட் போனில் நீங்கள் எவ்வித தொடுதலும் இல்லாமல் இருந்தாலே உங்களது போனில் ஊடுருவ வைக்க முடியும். இந்த பெகாசஸ் மென்பொருளை தான், இஸ்ரேல் பல நாடுகளுக்கு விற்றிருக்கிறது இந்தியாவும் அந்த மென்பொருளை வாங்கி 40க்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகளை நடமாட்டத்தை வேவு பார்த்திருக்கிறது என்பது குற்றச்சாட்டாகும்.

இந்த பெகாசஸ் மென்பொருள் ஸ்மார்ட்போனில் ஊடுருவி சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் தகவல்களை திருடும். அதாவது போனில் உள்ள BUG  மூலம் பெகாசஸ் உள்ளே புகுந்துவிடும். வேறு ஏதாவது ஒரு லிங்க்கை நீங்கள் க்ளிக் செய்தால் போனுக்குள் பெகாசஸ் நுழைந்துவிடும்.

IOS, ஆன்ட்ராய்டு போனில் பெகாசஸ் மூலம் ஒட்டுகேட்கலாம்… உங்களுக்கு என்ன மெசேஜ் வந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாமல் படிக்கலாம். ஜிபிஎஸ்சை ஆட்டோமேட்டிக்காக இயக்கி, நகர்வுகளை அறியமுடியும். எண்டு டூ எண்டு(end to end script)ஸ்கிரிட் தகவலையும் பெறலாம். இத்தனையும் பெற உங்களின் அனுமதி தேவையில்லை என்பது தான் முக்கிய விஷயமே.

யாரை டார்கெட் செய்ய வேண்டும், யாரை உளவு பார்க்க வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டபின்னர், சம்பந்தப்பட்ட நபருக்கு ஒரு வலைத்தள இணைப்பு அனுப்பப்படும். அந்த லிங்க்கை சம்பந்தப்பட்டவர் கிளிக் செய்தால் பெகாசஸ் இன்ஸ்டால் ஆகிவிடும். இதுதவிர வாட்ஸ் அப் கால் BUG மூலமாகவும், மிஸ்டுகால் மூலமாக உங்கள் போனின் உள்ளே பெகாசஸ் என்ட்ரியாக முடியும்.

உங்களின் அழைப்பு பட்டியலில்(call records) இருந்து எண் நீக்கப்படுவதால் உங்களுக்கு மிஸ்டு கால் வந்தது பற்றியே தெரிய வாய்ப்பிருக்காது அல்லது அறிந்து கொள்ளவே முடியாது. இதை வைத்து தான் நாட்டில் உள்ள முக்கிய நபர்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளனர்.

ஆனால் என்எஸ்ஓ நிறுவனம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து இருக்கிறது. இந்த சாப்ட்வேரை நாங்கள் அரசாங்கங்களுக்கு மட்டும் தான் விண்ணப்பிப்போம், தனியார் நிறுவனங்களுக்கு அல்ல என்று கூறி இருக்கிறது.

தீவிரவாத செயல்கள் பற்றிய நடமாட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதாக உறுதி அளித்த பின்னர் தான் இந்தியாவுக்கு விற்கப்பட்டதாகவும் அடித்து சொல்லி இருக்கிறது. இப்போது புரிகிறதல்லவா ..? ஏன் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு கேள்வி மேல் கேள்வி கேட்கும் காரணம்…!

Most Popular