பிறந்தது சுபகிருது…!! இந்த ராசிக்கு அடிச்சது யோகம்..! புத்தாண்டு பலன்கள்
பிலவ ஆண்டு முடிந்துவிட்டது, இன்று சுபகிருது ஆண்டு பிறந்திருக்கிறது. சுபகிருது என்றால் அதிகளவு நன்மைகளும், நலன்களும் நிறைந்தது என்று பொருள்.
சித்திரை திருநாள் முதல் நாளில் எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை அறிந்து கொள்ளாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதோ 12 ராசிகளுக்கான புத்தாண்டு பலன்கள்…
மேஷம்:
இந்த ராசியினருக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சம்பந்தபட்டவர்கள் அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கலாம். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புகள் உள்ளது.
ரிஷபம்:
புத்தாண்டின் முதல் நாளில் வாழ்க்கையில் மாற்றங்களுக்கான அறிகுறிகள் தென்படலாம். காசு, பணம் வரவை எதிர்பார்க்கலாம். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். தம்பதியிடையே பிணக்குகள் மறைந்து அன்னியோன்யம் மேலோங்கும்.
மிதுனம்:
பிரச்னைகள் இன்று முதல் குறையும் என்று எதிர்பார்க்கலாம். சுபம் தரும் ஆண்டாக இந்த ராசிக்காரர்களுக்கு அமையும் என்று கூறலாம். பாக்கி தொகைகள் வசூல் ஆகும். உத்தியோகம், தொழில் ஸ்தானத்தில் மரியாதை உயரும். திருமண யோகத்துக்கான வாய்ப்புகள் உண்டு.
கடகம்:
குடும்ப உறுப்பினர்கள் இடையே மகிழ்ச்சி தாண்டவமாடும். வரவுகளுக்கு ஏற்ப செலவுகளுக்கும் பஞ்சமில்லை. அன்பை மட்டுமே காட்டினால் உச்சபட்ச பலன் நிச்சயம்.
சிம்மம்:
எதிர்பாராத மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மகிழ்ச்சி நிலவும் நாள். இல்லறம் இனி இனிதாக மலரும் வாய்ப்புகள் அதிகம்.
கன்னி:
திட்டமிட்ட வாழ்க்கை பலன் தரும். குடும்பத்தில் நிலவும் கருத்து வேறுபாடுகள் மறையும் காலம் இது. வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்தை சந்திக்கலாம்.
துலாம்:
சுப வாய்ப்புகள் தேடி வரும் நாள். பணம், தொழில் மகிழ்ச்சியை தருவதாக அமையும். உடல்நலனில் கூடுதல் அக்கறை கொள்ளவேண்டிய காலகட்டம்.
விருச்சிகம்:
பொறுமை ஒன்றுதான் அனைத்து நன்மைகளையும் தரும் என்பதை இவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தொழில் முதலீடுகளில் அசாத்திய கவனம் அவசியம். விட்டுக் கொடுத்தால் இல்வாழ்க்கையில் இன்பம் தாண்டவமாடும்.
தனுசு:
இந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கவலைகள் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை உணரும் தருணம்.
மகரம்:
மிகவும் சுறுசுறுப்பான நாள். கற்பதற்கு ஏது வயது என்பதை நினைவில் கொள்ளும் நாள். மனவேற்றுமைகள் அகன்று ஒற்றுமை அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கும்பம்:
யூகிக்க முடியாத நற்பலன்களை எதிர்பார்க்கலாம். சுப செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் நன்மைகள் உண்டு. கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
மீனம்:
அனைத்தும் நன்மைக்கே என்பதை முன்னிறுத்தி கொள்ளுதல் நலம். பொறுமையே வெற்றிக்கான திறவுகோல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருமண ஏற்பாடுகள் கைகூடும்.
(பொறுப்பு துறப்பு: மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அனுமானங்கள் அடிப்படையில் விவரிக்கப்பட்டவை. பலன்களில் மாறுபாடுகள் இருக்கலாம். Indiagate tv மேற்கண்ட எவற்றையும் உறுதிப்படுத்தவில்லை)