இன்றைய கொரோனா நிலவரம் எப்படி.? லேசா, லேசா குறைந்த பாதிப்பு…!
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. நாள்தோறும் 4 லட்சம் என்ற அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகிறது.இந்நிலையில் கடந்த 2 நாள்களாக குறைந்திருந்த பாதிப்பு இன்றும் அப்படியே பிரதிபலிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 3 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பானது 2,22,96,414 ஆக உள்ளது. ஒரே நாளில் 4092 பேர் இறக்க, பலி எண்ணிக்கை 2,42,362 ஆக பதிவாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 3,86,444 பேர் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். இன்னமும் 37,36,648 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர்.