ஊரே தண்ணி… சோறு வேணுமா? மக்களை கேவலப்படுத்திய பிரபல நடிகை
சென்னை: எங்கு பார்த்தாலும் தண்ணியா இருக்கும் போது சோறு வேணுமா? 21 நாள் மனுஷன் சாப்பிடமா உயிர்வாழலாம் என்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கேவலப்படுத்தி இருக்கிறார் நடிகை ஒருவர்.
அந்த நடிகையின் பெயர் வினோதினி வைத்தியநாதன். அண்மையில் தான் மக்கள் நீதி மய்யத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். அவ்வப்போது ஏதேனும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தமது கருத்துகளை முன் வைப்பது வழக்கம்.
தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை பற்றி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் பேசிய விஷயங்கள் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கின்றன.
மக்கள் எல்லோரையும் அரசாங்கம் காப்பத்துணுமா? அது எப்படி முடியும்? பால், சோறு இதெல்லாம் கட்டாயம் வேணுமா? ஏன் தண்ணி குடிச்சி உயிர் வாழ முடியாதா? மனுஷன் 21 நாள் தண்ணி மட்டுமே குடிச்சி சாகாம இருக்கலாம்.
நமக்கு நாமே மாதிரி உனக்கு நீயே தாம்பா காப்பாத்திக்கணும்… கார்ப்பரேட் கம்பெனியில் நிறைய சம்பாரிக்கிற மாதிரி நினைப்பா? என்று வாய்க்கு வந்ததை உளறி தள்ளியிருக்கிறார்.
நடிகை வினோதினியின் வீடியோவை பார்ப்பவர்கள் ஏக வசனத்தில் அவரை கண்டித்தும், விமர்சித்தும் வருகின்றனர். வாய் கொழுப்பாய் பேச வேண்டாம் என்றும் போட்டு தாக்கி இருக்கின்றனர்.
அவரின் 4 நிமிட வீடியோ பதிவு இங்கு கீழே இணைக்கப்பட்டு உள்ளது.