மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனாவா..? எங்கே போய் முடியுமோ..!
நாகை: தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கொரோனா அறிகுறிகள் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக இருப்பவர் ஓ.எஸ் மணியன். அவரது மனைவி கலைச்செல்வி உடல்நலக் கோளாறால் கடந்த 28ந்தேதி உயிரிழந்தார்.
நாகை மாவட்டம் ஓரடியம்புலத்தில் கலைச்செல்வியின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அதில் உறவினர்கள், அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந் நிலையில் இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உறவினர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஒரு வாரம் தம்மை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.