ஷாக்கா இருக்கா…? இந்த ஒரு மாம்பழத்தின் விலை ரூ.1000….!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் விளையும் நூர்ஜஹான் வகை மாம்பழம் ஒன்றின் விலை 1000 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நூர்ஜஹான் ரக மாம்பழங்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் தான் விளையும். குறிப்பாக அலிராஜ் மாவட்டம், கத்திவாடா பகுதியில் தான் இந்த மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்த மாம்பழத்தின் ருசியும், அதன் எடையும் தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு மாம்பழமும் கிட்டத்தட்ட 2 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்குமாம். ஜூன் மாதத்தில் விளையும் இந்த மாம்பழத்தை பெற விவசாயிகளிடம் முன்னரே ரிசர்வ் செய்து வைத்திருக்க வேண்டுமாம். அப்போது தான் குறிப்பிட்ட சமயத்தில் மாம்பழம் கிடைக்கும்.
ஆனால் இப்போது கொரோனா ஊரடங்கால் மாம்பழம் விற்பனை சற்றே மந்தமாகி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர். ஆனாலும் ஒரு மாம்பழத்தின் விலை ஆயிரம் ரூபாய் என்பது கொஞ்சம் ஓவர்தான்….!