இன்றைய TOP 10 News…!
தேசிய அளவிலும், தமிழகத்திலும் இன்றைய தினத்தின் டாப் 10 செய்திகளை பார்க்கலாம்:
மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகயை மத்திய குழுவினர் 2ம் நாளாக இன்றும் ஆய்வு நடத்த உள்ளனர்.
காஷ்மீர் விவகாரத்தில் கூட்டாட்சி தத்துவம் என்ன ஆனது? என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பி ஆ. ராசா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ராஜஸ்தான் புதிய முதலமைச்சராக பாஜக முதல் முறை எம்எல்ஏ பஜன் லால் சர்மா தேர்வாகி உள்ளார்.
சென்னை நீலாங்கரையில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 15 டன் குப்பைகளை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீரங்கம் அய்யப்ப பக்தர்களை தாக்கிய சம்பவத்தில் கோயில் பாதுகாவலர்கள் பாரத், செல்வகுமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி பட்டையை கிளப்பி உள்ளது. வீடியோவை பார்த்து குதூகலமாகி உள்ள ரசிகர்கள் படத்தை விரைவில் எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறி உள்ளனர்.
571வது நாளாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்வித மாற்றமும் இன்றி 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
காசாவில் உடனடி போர் நிறுத்தம் செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக ஐநாவில் இந்தியா வாக்களித்துள்ளது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் சென்னை பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.