கொரோனாவின் விஸ்வரூபம்…! ஒரே நாளில் 4 லட்சம் பேர்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா தொற்றின் 2வது அலை இந்தியாவை பிடித்து உலுக்கி வருகிறது. கடந்த சில நாட்கள் 3 லட்சம் என்று இருந்த தொற்று எண்ணிக்கை இப்போது 4 லட்சத்தை கடந்து அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,12,262 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக இருக்கிறது.
ஒரே நாளில் 3980 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையானது 2 லட்சத்து 30 ஆயிரத்து 168 ஆக அதிகரித்து உள்ளது.
இன்னமும் கொரோனா தொற்றால் 35,66,398 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 29 கோடியே 67 லட்சத்து 75 ஆயிரத்து 209 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் 19,23,131 மாதிரிகள் பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.