#செருப்படிவாங்கிய_விஜய் சின்ன கேப்டனாம்…!
சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு விஷயம் அல்லது சம்பவம் டிரெண்டிங்காகி கலக்கோ, கலக்கு என்று கலக்கி தள்ளும்.
இப்போது டிரெண்டிங் ஆகி இருக்கும் விஷயம் வழக்கம் போல் சினிமா சம்பந்தப்பட்டது தான். #செருப்படிவாங்கிய_விஜய் என்ற ஹேஷ்டேக் தான் அது.
இந்த ஹேஷ்டேக்குக்கு வரும் பதில்களும், விமர்சனங்களும் தான் சூப்பர். இயக்குநர் ஏஆர் முருகதாஸ் விஜய்யை வைத்தும், ரஜினிகாந்தை வைத்தும் படங்களை இயக்கியவர். மேடை ஒன்றில் ரஜினியை புகழ்ந்து பேசிய அவரின் பேச்சை ஒரு ரசிகர் வெளியிட்டு விஜய்யை விமர்சித்து இருக்கிறார்.
இன்னொரு ரசிகரோ, ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் உதவிகள் செய்து வருகிறார் விஜய், எனவே அவர் சின்ன கேப்டன் என்று கூறலாம், அதற்கு தகுதி இருப்பதாக போட்டு தாக்கி உள்ளார்.
இதென்ன பிரமாதம் என்பது போல விஜய் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், விஜய் நடித்துள்ள படங்களில் 3 மட்டுமே தமக்கு பிடித்தவை என்று பேட்டி ஒன்றில் கூறியதை தேடி பிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
வேறு ஒரு ட்விட்டர் அன்பரோ, விஜய் நடித்துள்ள பழைய படங்களில் இருந்து காதல் மற்றும் கட்டிப்பிடி காட்சிகளை எடுத்து வெளியிட்டு அடி தூள் கிளப்பி உள்ளார். மற்றொரு நபர், அரசியலுக்கு வாங்க விஜய், இதைவிட செருப்படி கிடைக்கும் பாருங்க.. என்று கலாய்த்து பின்னி எடுத்து இருக்கிறார்.