Sunday, May 04 12:55 pm

Breaking News

Trending News :

no image

கொரோனாவை கூப்பிடுங்க..! மூக்கில் ஸ்பிரே அடிக்கும் மருந்து கண்டுபிடிச்சாச்சு….!


பெய்ஜிங்: சீனாவில் மூக்கில் ஸ்பிரே அடிக்கும் வகையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

உலக நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இப்போது 2வது ஆண்டு நடந்து கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என உலகம் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறது கொரோனா. உருமாறிய கொரோனாவின் தாக்கமும் கொஞ்சநஞ்சமல்ல.

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி ஒரு பக்கம் இருந்தாலும், தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்புகளில் பல நாடுகள் இன்னமும் தீவிர முயற்சியில் இருக்கின்றன. குறிப்பாக சீனா அனைத்து விதமான முயற்சிகளில் இறங்கி உள்ளது.

இந் நிலையில், மூக்கில் ஸ்பிரே அடிக்கும் வகையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை நாசி துவாரத்தில் செலுத்திக் கொள்ளலாம். இது ஒரு திரவநிலை வடிவம் கொண்ட மருந்தாகும்.

வலி நிவாரணி போன்று மூக்கில் அனைவரும் ஸ்பிரே செய்து கொள்ளலாம். மூக்கில் இந்த மருந்தை செலுத்திய பின்னர் அந்த மருந்து நுரையீலுக்குள் செல்கிறது. அங்கு கொரோனா தொற்றின் தாக்கத்தை இந்த மருந்து குறைக்கிறது.

சீனாவில், ராணுவ அறிவியல் அகாடமியின் கீழ் உள்ள ராணுவ மருத்துவ நிறுவனம் இணைந்து இந்த மருந்தை உருவாக்கி இருக்கிறது. இந்த புதிய மருந்து தற்போது பரிசோதனை நிலையில் உள்ளது. விரைவில் மருந்தின் அடுத்த கட்ட முன்னேற்றம் குறித்து சீனா அறிவிக்கும் என்று தெரிகிறது.

Most Popular