முடிஞ்சிடுச்சி…! அதிமுகவுக்கு குட்பை… திமுகவில் என்ட்ரி..!
கோவை: கோவையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைகிறார்.
கோவை பயணம் மேற்கொண்டு இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரின் வருகையால் கோவை மாவட்டமே களை கட்டி உள்ளது. கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தி திமுகவின் கோட்டையாக மாற்றும்வண்ணம் பல நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி மேற்கொண்டு இருக்கிறார்.
அதன் ஒரு முக்கிய புள்ளியாக அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். பொள்ளாச்சியில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தம்மை இணைத்துக் கொள்கிறார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள மக்கள் பணியாற்ற போவதாகவும் கூறி உள்ளார். அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைகின்றனர்.
ஆறுகுட்டி கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து 2011, 2016 ஆண்டுகளில் எம்எல்ஏவாக தேர்வானவர். கோவை மாவட்ட அதிமுகவில் முக்கிய நபராக அடையாளம் காட்டப்பட்டவர். ஓபிஎஸ் ஆதரவாளாக இருந்தவர்.
கட்சியின் செயல்பாடுகளில் அண்மை காலமாக ஈடுபடாமல் இருந்த அவர் அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து சில கருத்துகளை கூறி இருந்தார். ஈபிஎஸ், ஓபிஎஸ் தவிர்த்து வேறு யாராவது கட்சிக்கு தலைமை ஏற்றால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆறுகுட்டி, அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அந்த அச்சத்தில் அவர் திமுகவில் இணைய முடிவெடுத்து இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.