பிரதமர் மோடியின் தாடி…! டீக்கடைக்காரர் பண்ணிய வேலை…!
பாராமதி: பிரதமர் மோடி, தமது தாடியை ஷேவ் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி டீக்கடைக்காரர் ஒருவர் 100 ரூபாய் அனுப்பி அதிர வைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பாராமதி பகுதியை சேர்ந்தவர் அனில்மோர். டீக்கடைக்காரரான இவர்தான் பிரதமர் மோடிக்கு 100 ரூபாயை மணியார்டர் அனுப்பி ஷேவ் செய்து கொள்ளுமாறு கூறி இருக்கிறார்..
ஏன் அவ்வாறு செய்தார் என்பதை அனில் மோர் கூறும் காரணம் சற்றே வித்தியாசமானதாக இருக்கிறது. அவர் கூறுவது இதுதான்:
பிரதமர் தாடி வளர்த்துக் கொண்டு வருகிறார். அவருக்கு எதையாவது வளர்க்க வேண்டும் என்றால் நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பை வளர்க்கட்டும். மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கட்டும்.
2 வருடங்களாக மக்கள் படும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற வேண்டும். பிரதமர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவரை காயப்படுத்த விருப்பமில்லை. ஆனால் அவரது கவனத்தை ஈர்க்கவே இப்படி செய்திருக்கிறேன் என்று கூறுகிறார் அனில் மோர்.