மக்களவையில் attack…! 2 பேரால் திக், திக்…! ‘ஷாக்’ வீடியோ
டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் நுழைந்த 2 பேர் திடீரென தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் திகிலை கிளப்பி உள்ளன.
பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்று நாடாளுமன்ற தாக்குதல் தினம்… அதனை முன்னிட்டு அங்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், மக்களவை கூட்டம் தொடங்கியது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் திடீர் பரபரப்பு. 2 பேர் பாதுகாப்பு கெடுபிடிகளை தாண்டி உள்ளே நுழைந்திருக்கின்றனர்.
எம்பிக்கள் இருக்கைகள், டேபிள்கள் மீது ஏறி தாவி செல்ல ஆரம்பித்துள்ளனர். கையில் இருந்த வண்ண புகை குண்டுகளை வீச… எம்பிக்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
மஞ்சள் நிற புகை அவர்கள் 2 பேரும் வீசியதில் வெளியேற, திணறி போன எம்பிக்கள் அவர்களை பிடிக்க எத்தனித்தனர். சிறிது நேர களேபரத்துக்கு பின்னர் 2 பேரையும் அமுக்கிய எம்பிக்கள் பின்னர் பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
சில நிமிடங்களில் நிகழ்ந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிக பாதுகாப்பு, சோதனைகள் என கெடுபிடியான நாடாளுமன்றத்தில் 2 பேர் எப்படி நுழைந்து, தாக்குதல் நடத்தினர் என்ற கேள்விகள் எழ தொடங்கின.
விசாரணையில் பிடிபட்ட 2 பேரும் ஹரியானாவை சேர்ந்த நீலம், மகாராஷ்டிராவை சேர்ந்த அமோல் சிண்டே என்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக அவர்களுக்கு அனுமதி சீட்டு அளித்தது யார் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
பாஜக மைசூர் எம்பி பிரதாப் சிம்ஹா என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் நிலவிய இந்த திகில் சமபவத்தின் வீடியோ வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.