சீமான் விளக்கு பிடிக்கணும்…! நாம் தமிழர் தம்பிகள் அப்செட்
சின்னம் பறிபோயிடுச்சு என்று போகிற இடம் எல்லாம் கூப்பாடு போட்டவர் சீமான். அவரது கட்சிக்கு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கிறது.
விவசாயி சின்னம் தான் நாம் தமிழர் கட்சியின் சின்னம் என்பது கடந்த தேர்தல் வரைக்கும் இருந்த கணக்கு. தற்போது எல்லாம் மாறிவிட்டது. அந்த சின்னம், வேறு ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டது.
மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து தமது சின்னத்தை முடக்கிவிட்டது என போகிற இடம் எல்லாம் மைக் இல்லாமல் கதறி வருகிறார் சீமான். தம் கட்சி வளருகிறது, தம்மை முடக்க பார்க்கிறார்கள், அதன் முன்னோட்டம் தான் இது என்று ஊர் தோறும் சீமான் புலம்பி வருவது தனிக்கதை.
இந் நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சின்னத்தை அறிந்த நாம் தமிழர் தம்பிகள் மிகுந்த அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பட்டபாடு ஒரு பக்கம் இருக்க….இந்த சின்னத்தை வைத்து என்ன செய்வது என்று கவலையுடன் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் புதிய சின்னம் பற்றி அறிந்த நெட்டிசன்ஸ் பண்ணும் அலப்பறை வேற லெவல். தோற்பது உறுதி, அதுக்கு எந்த சின்னமாக இருந்தாலும் என்ன? என்று போட்டு தாக்கி வருகின்றனர்.