அப்பன் வீடு, ஆத்தாவா..? உதயநிதியை சிதைச்சுவிட்ட அமைச்சர்
டெல்லி: அப்பன் வீட்டு காசய்யா கேக்குறோம் என்ற அமைச்சர் உதயநிதியின் பதிலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடியாக பேசி உள்ளார்.
மழை ஓய்ந்துவிட்டது, வெள்ளமும் வடிந்துவிட்டது, ஆனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் அழுகுரல் ஓயவில்லை.
கடுமையான சேதம், வீடு, உடமைகள், விளைநிலங்கன் பலர் இழந்துள்ளனர். தமிழக அரசு நிவாரண உதவி வழங்கி தற்போது 6000 ரூபாய் இழப்பீடும் அறிவித்துள்ளது. மத்திய அரசு இந்நிகழ்வை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது தமிழக அரசின் கோரிக்கை.
ஆனால் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் தமது பதிவில் அப்பன் வீட்டு காசய்யா கேக்குறோம் என்ற அமைச்சர் உதயநிதியின் பேச்சை கொத்து பரோட்டாவாக்கி பதிலடி தந்துள்ளார்.
அவர் கூறியதாவது: அவங்கப்பன் வீட்டு பணமா? என்று கேட்பவர், அவங்கப்பன் வீட்டு சுகத்தை வச்சுட்டு இப்போது பதவியை அனுபவிச்சுட்டு இருக்காரா? அப்படின்னு சொல்ல முடியுமா? கேட்க முடியுமா?
உன் அப்பன் வீடு? ஆத்தாவா? இந்த பேச்செல்லாம் அரசியலில் நல்லதில்ல, நாக்கில பதவிக்கு ஏத்த அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரணும் என்று பேசி இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.